பெரம்பலூர்மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி திடீர்குப்பம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் நாராயணனுக்கு வயது 80. இந்நிலையில் விவசாயி நாராயணன், வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது அருகே உள்ள நிலத்தின் உரிமையாளரான காமராஜ் என்பவர் மகன் ராமமூர்த்தியுடன் (வயது 24) நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது பேச்சு வார்த்தை முற்றிய நிலையில், முதியவர் நாராயணன் கழுத்தை நெறித்து கொலை செய்தவிட்டு அந்த இடத்திலிருந்து ராமமூர்த்தி தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. பின்னர் நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து வயலில் கிடந்து உள்ளார். அதனைத் தொடர்ந்து வயலுக்கு நாராயணனைத் தேடி வந்த நாராயணனின் மனைவி அழகம்மாள், இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.