பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், பாடாலூர், சித்தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், பெரம்பலூர் - அரியலூர் சாலையில் மருதையான் கோவில் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற மயில் மீது வாகனம் மோதியது. இதில் காயமுற்ற மயில் சாலையில் நிராதரவாகக் கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மயிலை மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்தனர்.