ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார வாரியத்தில் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - Youth Federation of India

பெரம்பலூர்: மின்வாரியத்தில் உள்ள 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனே நிரப்ப கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Youth Federation of India
Youth Federation of India
author img

By

Published : Nov 10, 2020, 1:33 PM IST

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மின்சார வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் 4500 கணக்கீட்டாளர்கள், 2500 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய காலி பணியிடங்களைப் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

ABOUT THE AUTHOR

author-img

...view details