பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே டி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பிருத்விராஜ். ஆயில் மில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இளம் வயது முதலே ஆர்வத்தின் காரணமாக யோகா கற்று வந்துள்ளார்.
யோகா மூலம் உலக சாதனை நிகழ்த்துவதற்காகப் பல்வேறு முயற்சிகளிலும் பிருத்விராஜ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஆக.15), நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓடும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே யோகாசனம் செய்யும் இளைஞர் தொடர்பான காணொலி நீளுமா உதவிக்கரம்?
இதனைத் தொடர்ந்து பிருத்விராஜ் 15 கி.மீ., தூரம் இரு சக்கரவாகனத்தில் சென்றவாறு, 75 யோகாசனங்களை செய்து சாதனை முயற்சி மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'எனது சாதனை முயற்சிக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால், இந்தியாவை யோகாசன சாதனையால் உலக அரங்கில் தலை நிமிரச் செய்வேன். அரசு செய்யும் உதவி, சாதிக்க வேண்டும் என நினைக்கும் பலருக்கு ஓர் உந்துதலாக அமையும்.
பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி கற்றுத்தரவும் முடிவு செய்துள்ளேன்' என்றார்.
இளைஞரின் இந்த முயற்சி பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தின விழா: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய பிரதமர்!