பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்வீலிங் சாகசத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அதிக வாகனப் போக்குவரத்து உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் இளைஞர்கள் செய்த பைக்வீலிங் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.