பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் என்பவருடைய மகன் தாஸ் (எ) ஜேசுதாஸ். இவர் அன்னமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் என்பவரிடம் தன்னுடைய விவசாய நிலத்தை அடமானமாக வைத்து ரூ. 3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மேலும் வட்டியுடன் ரூ. 6 லட்ச ரூபாய் கட்டிய பிறகும் தலைமை ஆசிரியர் ஜோசப் கடன் வாங்கிய ஜேசுதாசுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
கந்து வட்டி கொடுமையால் தற்கொலை - இளைஞர் வாக்குமூலம் - youth committed suicide after alleged usury torture
பெரம்பலூரில் இளைஞர் ஒருவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலம் அளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜேசுதாஸ் வயலுக்கு வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். பூச்சி மருந்து குடிப்பதற்கு முன்பு தன்னுடைய மரணத்திற்கு தலைமை ஆசிரியர் ஜோசப் கொடுத்த டார்ச்சரே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே இறப்பதற்குப முன்னதாக தனது இறப்பிற்கு காரணமானவர் யார் என்பது குறித்து ஜேசுதாஸ் வாக்குமூலம் அளித்துள்ளதால், அவரது மரணத்திற்கு தீர்வு கிடைக்காமல் உடலை எடுக்கப்போவதில்லை எனவும் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தற்போது ஜேசுதாஸின் வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.