பெரம்பலூர் ஆலம்பாடி சாலை எம்ஜிஆர் நகரில் வசித்துவருபவர்கள் அப்துல் ரசாக் - சராம்பாள் தம்பதியினர் . கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அப்துல் ரசாக் இறந்துவிட்டார்.
இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுடைய இளைய மகன் சதாம் உசேன் என்பவர் பெரம்பலூரில் உள்ள கம்பி விற்பனை கடையில் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற சதாம் உசேனை அவரது தாய் சாராம்பாள், ஏன் குடிக்கிறாய் என திட்டியுள்ளார்.