தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது! - காவல்துறை விசாரணை

பெரம்பலூர்: குன்னம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Young man arrested for kidnapping girl and marrying her
Young man arrested for kidnapping girl and marrying her

By

Published : Jul 11, 2020, 2:37 AM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான ஆனந்த்பாபு (23). இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சேலத்திலிருந்து தலைமறைவாக இருந்த ஆனந்த்பாபுவை கைது செய்த காவல்துறையினர், சிறுமியையும் மீட்டு பெரம்பலூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details