தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி! - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புத்துணர்வு அளிக்க கூடிய யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி
கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

By

Published : Aug 6, 2020, 12:27 PM IST

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க 19 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

பெரம்பலூரில் கவுல் பாளையத்தில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க கூடிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 392 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

170 பேர் தற்போது திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 28 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய சத்தான உணவு வழங்கப்படுவதோடு சித்த மருத்துவர்கள் மூலம் புத்துணர்ச்சி அளிக்க கூடிய யோகா பயிற்சியும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி காலை மாலை என இரண்டு வேலைகளில் கரோனா நோயாளிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details