பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் சார்பில் நீர் மேலாண்மை குடிநீர் பரிசோதனை பயிற்சி குறித்த கருத்து பட்டறை நடைபெற்றது.
பெரம்பலூரில் நீர் மேலாண்மை குறித்த கருத்து பட்டறை - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
பெரம்பலூர்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீர் மேலாண்மை குறித்த கருத்து பட்டறை நடைபெற்றது.
வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் ராமலிங்கம் இந்தப் பயிற்சி பட்டறை தொடங்கிவைத்தார். இதில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் நீரின் அவசியம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அங்கன்வாடி பணியாளர்கள், தண்ணீர் தோட்டி ஆபரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் ஆகியோருக்கு இந்த நீர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.