தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாஜகவினர் நலத் திட்டங்களைப் பெற்றுத் தருவார்கள்'

பெரம்பலூர்: பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குத் நலத்திட்டங்களை பெற்றுத் தருவார்கள் என்று பாஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

karupu muruganantham

By

Published : Sep 15, 2019, 3:14 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நலவாரிய பதிவுகள் மற்றும் கல்வி உதவி நலத்திட்ட உதவிகள் பற்றிய விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நலத்திட்ட உதவிகள் பற்றிய விளக்கக் கூட்டம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம், பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு (பொதுவான) நலத் திட்டங்களைப் பெற்றுத் தருவார்கள் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details