அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரிமூட்டம் போடும் தொழிலாளர்கள் பெரம்பலூர் அரனாரைப் பகுதியில் உள்ள ஏரியில் வேலி கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடுகின்றனர்.
கரிமூட்டம் போடப்பட்டு கிடைக்கப்பட்ட கரி, வியாபாரிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மூட்டை ரூபாய் 500 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில், 'இந்த விலை தங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை. கரி மூட்டம் போடப்பட்ட மூட்டை 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்றால்தான் தங்களது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்றும் கரிமூட்டம் போடும் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆனால், தங்களிடம் வரும் வியாபாரிகள் இந்த மூட்டையை வெறும் 500 ரூபாய்க்கு வாங்கி, சில்லறை வியாபாரிகளிடம் ஆயிரத்திற்கு விற்கின்றனர்.