பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இன்று ( ஜன.11) தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்கத்தினர், திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.
அச்சங்கத்தின் மாநில தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருவோடு ஏந்தி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் அப்போது, பாரபட்சமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலவாரியங்களில் கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களை தவிர்த்து, வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், உடனடியாக கரோனா பேரிடர் கால நிவாரண தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:பெரம்பலூரில் விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!