தருமபுரி சின்ன வத்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேசன். இவர் கல் உடைக்கும் தொழிலாளி. இவர் பெரம்பலூர் வெங்கலத்தில் உள்ள வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல் குவாரியில் இறங்கி கல் உடைத்துவிட்டு மேலே ஏறி வரும் பொழுது எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்தது. இந்த மண்ணில் கமலேசன் புதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மண் சரிந்து கல்குவாரி தொழிலாளி பலி! - பெரம்பலூர்:
பெரம்பலூர்: கல் குவாரியில் மண் சரிந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியானார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Quarrying of stone
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கமலேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.