தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! - பெண் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

sexual harassment
sexual harassment

By

Published : Oct 5, 2020, 1:40 AM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் செங்கோடன். இவர் நேற்று (அக்.4) அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அப்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அதையடுத்து, அந்த இளம் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இளம் பெண் கூச்சல் போடச் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய செங்கோடனை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உ.பி.,யில் தொடரும் அவலம்: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details