பெரம்பலூர் மாவட்டம் நகர்ப்புற பகுதிக்கு உட்பட்ட மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி(45). மருத்துவரான இவருக்கு கிருபாகரன் என்ற கணவர் உள்ளார். இவரும் மருத்துவர் என்பதால், பெரம்பலூர் வடக்கு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை இருவரும் நடத்தி வருகின்றனர்.
தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் - காவல்துறையினர் விசாரணை! - latest perambalur news
பெரம்பலூர்: தனியார் மருத்துவமனை நடத்தி வரும் பெண் மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை திடீரென வீட்டின் மின்விசிறியில் ஸ்ரீதேவி சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பெரம்பாலூர் மாவட்ட காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் , தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே:கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை: திருவள்ளூரில் கோட்டாட்சியர் விசாரணை