தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை மிரட்டி நகைகள் கொள்ளை! - பெரம்பலூர் அண்மைச் செய்திகள்

பெரம்பலூர் : வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 21 சவரன் தங்க நகைகள், ரூ. 5 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை மிரட்டி நகைகள் கொள்ளை!
பெரம்பலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை மிரட்டி நகைகள் கொள்ளை!

By

Published : May 9, 2021, 7:47 PM IST

பெரம்பலூர் மாவட்டம் சிறுகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சத்தியா. பாஸ்கர் பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பொதுவாக பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் நள்ளிரவு நேரத்தில்தான் வீடு திரும்புவார். அதே போல பாஸ்கர் நேற்றும் (மே. 8) பணிக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் வீட்டில் பாஸ்கரின் மனைவி சத்தியா, இரு குழந்தைகள் மட்டும் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு சத்யா திடுக்கிட்டு எழுந்துள்ளார். தனது கணவர் பாஸ்கர்தான் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் என நினைத்து முன்பக்க கதவை திறந்து பார்த்துள்ளார். வீட்டின் வெளியே யாரும் இல்லாததைக் கண்ட சத்தியா மீண்டும் வீட்டின் உள்ளே வந்துள்ளார்.

அப்போது முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் சத்யாவின் வாயில் துணியை வைத்து அழுத்தி, நகைகளை கழட்டி கொடுக்குமாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். அவர் அணிந்திருந்த 17 சவரன் தாலியுடன் கூடிய சங்கிலி, 4 சவரன் தங்க வளையல்களை பறித்துள்ளனர். தொடர்ந்து வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாஸ்கரின் இருசக்கர வாகன சத்தத்தை கேட்ட கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியே தப்பித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : அசாம் முதலமைச்சராகும் ஹிமந்தா பிஸ்வா சர்மா?

ABOUT THE AUTHOR

...view details