பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் பாலசுப்ரமணியன் துபாயில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், பாலசுப்ரமணியனின் தம்பி ராதாகிருஷ்ணன் திருமணத்திற்காக வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார். இதனிடையே பாலசுப்ரமணியன் வீட்டார் விஜயலட்சுமியிடம் வரதட்சணை வாங்கி வர சொல்லியும், பைக் வாங்கி தரச் சொல்லியும் கூறியுள்ளனர்.
பூச்சி மருந்து குடித்து பெண் உயிரிழப்பு - பெற்றோர் தர்ணா - Perambalur district
பெரம்பலூர்: பூச்சி மருந்து குடித்து இறந்துபோன பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி பெற்றோர், உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமி பூச்சி மருந்து குடித்ததாக கூறி அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர் நேற்று(ஆகஸ்ட் 18) மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த விஜயலட்சுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், தாங்கள் புகார் கொடுத்தால் குன்னம் காவல் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், கூறி பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் சடலத்தை பெற மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.