பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் திருமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர், 19 ஆண்டுகளாக துபாய் நாட்டில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுவாமிநாதன், மீண்டும் துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார்.
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு! - பெரம்பலூர் செய்திகள்
பெரம்பலூர்: வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டு தரக்கோரி, அவரது மனைவி குழந்தையுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று துபாய் நாட்டில் சுவாமிநாதன் தூக்கிட்டு இறந்துள்ளார் என்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து வெளிநாட்டில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி இறந்த சுவாமிநாதனின் மனைவி ஆனந்தி மற்றும் மகள் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:கூலித்தொழிலாளி தூக்கிட்ட நிலையில் கண்டெடுப்பு: உறவினர்கள் போராட்டம்