தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று(மே.24) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு சமயத்தில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு கரோனா வழிகாட்டுநெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு மதனகோபால சுவாமி கோவியில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன.இதில் கலந்து கொண்டவர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.
இந்த திருமணங்களில், விதியை மீறி அதிகளவில் கலந்து உறவினர்கள், கலந்து கொண்டனர். மணமக்கள், உறவினர்கள் என அனைவருமே முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தனர்.