பெரம்பலூர்: வாலிகண்டபுரத்தில் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் ஆட்சிகாலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிவனுக்கு அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று (அக்.20) மாலை நடைபெற்ற பூஜையில் 1008 கிலோ அரிசியை வடித்து சமைத்துப் படையலிட்டு, சிவனுக்கு அன்னாபிஷேகம் சாத்தப்பட்டு, வாத்தியங்கள் முழங்க மூலவருக்குப் பூஜைகள் நடைபெற்றன.