புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (டிச. 03) மட்டும்
- செட்டிகுளம் - 59 மி.மீ.
- பாடாலூர் - 43 மி.மீ.
- அகரம் சீகூர் - 83 மி.மீ.
- லப்பைகுடிக்காடு - 75 மி.மீ.
- புது வேட்டக்குடி - 52 மி.மீ.
- பெரம்பலூர் - 104 மி.மீ.
- எறையூர் - 83 மி.மீ.
- கிருஷ்ணாபுரம் - 64 மி.மீ.
- தழுதாழை - 60 மி.மீ.
- வி.களத்தூர் - 49 மி.மீ.
- வேப்பந்தட்டை - 73 மி.மீ.
என மொத்தம் - 745 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே வேப்பந்தட்டை வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக விசுவக்குடியில் 33 அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தில் தற்போது 13 அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அரும்பாவூர் பெரிய ஏரி ஏற்கனவே நிரம்பிய நிலையில் அரும்பாவூர் சித்தேரி, வடக்கலூர் ஏரி ஆகியவை நிரம்பின.