தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா !

பெரம்பலூர்: மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

ராஜ அழங்காரத்தில் விநாயகர்

By

Published : Sep 2, 2019, 11:33 PM IST


நாடு முழுவதும் இன்று விநாயகப் பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மக்கள் விநாயகருக்கு சிலைகள் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் ,படையல்கள் வைத்தும் வழிப்பட்டு வருகின்றனர் .

பெரம்பலூர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிப்பாடு

அதேபோல பெரம்பலூர் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரையிலான 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டனர். மேலும் மக்கள் தங்களது வீடுகளில் பூஜை செய்ய களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பழங்கள், பூக்கள் மற்றும் சிறிய வகையான விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை

ABOUT THE AUTHOR

...view details