பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2013ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புவெளியிட்டிருந்தார்.
இதனிடையே, ஜவுளி பூங்காவிற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஜவுளி பூங்கா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் இதனையடுத்து, ஜவுளி பூங்காவிற்காக நிலம் சம்பந்தப்பட்ட 20 நபர்கள் தொழில் செய்திட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த ஜவுளி பூங்கா திட்டமானது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவுக்கு, அலுவலர்கள் ஜவுளி பூங்கா அமைக்க இந்த இடம் ஏற்றதல்ல என்ற மாற்றுக் கருத்தை முன்வைத்து தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் மனு கொடுத்தும் ஜவுளி பூங்கா திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரும், அரசு அலுவலர்களும் முட்டுக்கட்டை போடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளி பூங்கா திட்டை உடனடியாக செயல்படுத்தவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிங்க : ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது’ - விஜய பாஸ்கர்