தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தவசி மகன் வார்த்தை மாற மாட்டேன்'- பஞ்ச் வசனம் பேசி வாக்கு சேகரித்த விஜயபிரபாகரன் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

பெரம்பலூர்: துளசி வாசம் மாறினாலும் மாறும், ஆனால் தவசி மகன் வார்த்தை மாற மாட்டேன். வெற்றி பெற்றால் நானே களத்தில் இறங்கி வேலை செய்வேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

vijay-prabhakar-collected-votes-by-speaking-his-fathers-punch-dialogue-in-perambalur
vijay-prabhakar-collected-votes-by-speaking-his-fathers-punch-dialogue-in-perambalur

By

Published : Apr 1, 2021, 6:28 PM IST

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் மற்றும் குன்னம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "மக்களுடைய ஒட்டை விலைக்கு வாங்கியதால் தான் திமுகவும், அதிமுகவும் மிகப் பெரிய கட்சியாக உள்ளது. அதிமுக, திமுக என மாற்றி மாற்றி ஓட்டை போட்டு வரும் நீங்கள் மாற்று சக்தியாக உள்ள தேமுதிகவிற்கு வாக்கு அளியுங்கள்.

பணம் வாங்கியதாலும், கற்பூரம் வைத்து சத்தியம் செய்தாலும் அந்த இருபெரும் கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றனர். ஆனால், மனதார யாரும் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்க வில்லை.

தவசி மகன் வார்த்தை மாற மாட்டேன்

உங்கள் தொலைபேசியை மாற்றுகிறீர்கள், உடையை மாற்றுகிறீர்கள், வாகனத்தை மாற்று கிறீர்கள் ஏன் அரசாங்கத்தை மாற்றவில்லை.

துளசி வாசம் மாறினாலும் மாறும் ஆனால் தவசி மகன் வார்த்தை மாற மாட்டேன். எங்கள் தேமுதிக வேட்பாளரை ஜெயிக்க வைத்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நானே களத்தில் இறங்கி வேலை செய்வேன்" என உறுதியளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details