பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (எ) சின்னமணி (64). திமுக வேட்பாளரான இவர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆதனூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்ட நிலையில், சின்னமணி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியைவிட 160 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
பின்னர் வீடு திரும்பிய அவர், நேற்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக அரியலூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் அடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் யார்? என்ற குழப்பம்கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!