பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், ஒன்றான வேப்பந்தட்டை வட்டம் அரசலூர் கிராமத்திலுள்ள ஏரி அண்மையில் பெய்த கனமழையால் நிரம்பியது. ஏரிக்கரையை ஒட்டிய பகுதிகள் வலுவிழந்த காரணத்தால் இன்று ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. ஏரியிலிருந்து வெளியேறிய நீர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
இதனால், நெல், மஞ்சள் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கர் விளை நிலங்கள் பாழாகின. ஏரி கரையை ஒட்டி கிராம பஞ்சாயத்து சார்பாக கிணறு வெட்டப்பட்டதே கரை வலுவிழுக்க காரணம் எனக் கூறப்படுகிறது.