பெரம்பலூர்: விவசாயத்துக்கும் விவசாயிகளை பாதிக்கின்ற வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன.
இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும், மத்திய அரசைக் கண்டித்தும் மத்திய அரசிற்குத் துணைபோகும் மாநில அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.