தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரிலையன்ஸ் பெட்ரோல் சேமிப்பு நிலையத்தை முற்றுகையிட்ட விசிக! - புதிய வேளாண் சட்டம்

பெரம்பலூர்: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக கட்சியினர் ரிலையன்ஸ் பெட்ரோல் சேமிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Perambalur District News  VCK Party Protest In Perambalur  Agricultural Amentment  VCK Party Protest  பெரம்பலூர் மாவட்ட செய்திகள்  பெரம்பலூரில் விசிக போராட்டம்  புதிய வேளாண் சட்டம்  Vck party besieging Reliance Petrol stake in Perambalur
VCK Party Protest In Perambalur

By

Published : Dec 18, 2020, 2:00 PM IST

நாடு முழுவதும் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கின்ற புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் விசிக கட்சியினர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் சேமிப்பு நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

ABOUT THE AUTHOR

...view details