பெரம்பலூர்:புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை கண்டித்து டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசு அம்பானி போன்ற பெரு நிறுவன முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அம்பானி, அதானி நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தை டெல்லியில் போராடும் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளித்து விசிகவினர், தமிழ்நாடு முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்கள். அதன்படி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிரெண்ட்ஸ் வணிக வளாகத்தை பெரம்பலூர் விசிக மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் விசிகவினர் இன்று முற்றுகையிட்டனர்.