தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மருத்துவமனையில் வெளிமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு - திருச்சி மருத்துவமனையில் வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூர்: திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வெளி மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

utterpradesh migrant labour dies in trichy hospital due to illness
utterpradesh migrant labour dies in trichy hospital due to illness

By

Published : Apr 11, 2020, 11:00 AM IST

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்சப், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள தெரணியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதியுற்ற அவர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள பாடாலூர் காவல் துறையினர், இவர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், கரோனா பரிசோதனைக்காக இவரது ரத்த மாதிரிகள் சுகாதாரத் துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ரத்த புரத மருந்து

ABOUT THE AUTHOR

...view details