தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் பனங் கள் வைத்திருந்த இருவர் கைது - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: இருசக்கர வாகனத்தில் சுமார் 10 லிட்டர் பனங் கள் வைத்திருந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் பனை கள் வைத்திருந்த இருவர் கைது
இருசக்கர வாகனத்தில் பனை கள் வைத்திருந்த இருவர் கைது

By

Published : Apr 11, 2021, 12:36 AM IST

பெரம்பலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசிக்கொண்டு இரண்டு இளைஞர்கள் வந்தனர். அப்போது அவர்களை நிறுத்தி காவல் துறையினர் விசாரித்தனர்.

இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். உடனே சந்தேகமடைந்த காவல் துறையினர் மிரட்டியதில், அவர்கள் சேலம் மாவட்டம் வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ராமராஜ் ஆகியோர் என்பதும், இருசக்கர வாகனத்தில் சுமார் 10 லிட்டர் பனங் கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடமிருந்து கள், அதனை இறக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கள் இறக்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல; தடை விதிக்கும் அரசுதான் குற்றவாளி'

ABOUT THE AUTHOR

...view details