தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்: ஒருவர் உயிரிழப்பு - bike accident in perambalur youth dies

பெரம்பலூர்: லப்பைகுடிகாடு பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

two wheeler accident in perambalur youth dies
two wheeler accident in perambalur youth dies

By

Published : Nov 22, 2020, 10:38 PM IST

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தை தேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அரவிந்த், ஆறுமுகம் மகன் அரவிந்த், முனியசாமி மகன் முத்துக்குமார் ஆகியோர் இருசக்கர வாகனம் ஒன்றில் சு.ஆடுதுறை பகுதியிலிருந்து திருமாந்துறைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

இவர்கள் லப்பைகுடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது திருமாந்துறை நோவா நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியதில் நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆறுமுகத்தின் மகன் அரவிந்த் உயிரிழந்தார்.

ரஞ்சித் குமார் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க... சேலம் அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details