பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (42). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்துவருகிறார். இவர் நேற்றிரவு வேலை நிமித்தமாக செஞ்சேரியிலிருந்து குரும்பலூர் நோக்கி, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குரும்பலூர் பாளையம் அருகேயுள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக வலதுபுறம் திரும்பியுள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் குரும்பலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பேரளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (27) என்பவரின் வாகனம், ராமரின் வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமர் தலையில் பலத்தக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.