பெரம்பலூர் மாவட்டம் சித்தளி, களரம்பட்டி, அன்னமங்கலம், வெண்பாவூர், வடகரை, பாடாலூர், முருக்கன்குடி, ரஞ்சன்குடி உள்ளிட்ட பகுதிகளில் மான், மயில் போன்ற வன உயிரினங்கள் அதிக அளவில் வாழ்கின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் மானை வேட்டையாடிய இருவர் கைது ரஞ்சன்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மான் வேட்டையாடியதாக புதுநடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், தினேஷ் ஆகிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன், மதி, மணிகண்டன், தூற்று ஆகியோரை ரஞ்சன்குடி வனச்சரக வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மான் வேட்டையாடப்படுவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்க:
வெள்ளாட்டை வேட்டையாடிய சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை!