தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்களுடன் நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்ற மருத்துவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு! - மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம்

பெரம்பலூர்: புதிதாக கட்டப்பட்டு வரும் மருதையாற்று நீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் உள்பட இரண்டு இளைஞர்கள் தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நண்பர்களுடன் நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்ற மருத்துவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
நண்பர்களுடன் நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்ற மருத்துவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

By

Published : Aug 7, 2020, 7:14 AM IST

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ரஞ்சித் (MBBS ) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த பவித்ரன் இருவரும் கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத்தை காண்பதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஆக.6) பிற்பகல் சென்ற ரஞ்சித், பவித்திரன் இருவரும் நீர்த்தேக்க வடிகால் பகுதியில் உள்ள தடுப்பணையில் இறங்கிய போது கால் வழுக்கி இருவரும் நீரில் மூழ்கினர். தொடர் மழையால் தடுப்பணை ஓரம் தேங்கிய நீரில் அதிக ஆழம் என்பதால் நீச்சல் தெரியாத இருவரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து அரியலூர் தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மருவத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details