பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் பெரம்பலூரிலிருந்து செங்குணம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த அன்பு குமார், அருள்குமார் ஆகியோர் செங்குணம் கிராமத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
செங்குணம் பிரிவு சாலையில் வேகமாக வந்த இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. பின்னர் அவசர ஊர்தி 108-க்கு தகவல் கொடுக்கப்பட்டு மூவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.