பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடலூர் தெரணி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நுழைந்த கும்பல் ஒன்று டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கத்தியை காட்டி மூன்றரை லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது.
அதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடலூர் பகுதியில் பாடலூர் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர்களுக்கும் டாஸ்மாக் கொள்ளைக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார், சண்முகவேல், ராஜதுரை ஆகிய மூன்று பேர் டாஸ்மாக் கொள்ளையில் ஈடுபட்டதும், அதில் செந்தில் குமார் என்பவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குமரியில் நகை பட்டறையை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை!