அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ராஜேந்திர சோழன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அரண்மனையில் மூன்றடுக்கு செங்கல் சுவர்கள் உட்பட பல்வேறு கட்டுமானப்பணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, மண் பானை, உடைந்த தங்க காப்பின் ஒரு பகுதி, ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 60 சென்டிமீட்டர் அடி ஆழத்தில், 1.8 சென்டிமீட்டர் உயரமும்; 1.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட யானை தந்தத்தால் ஆன, அழகான பொருள் ஒன்று நேற்று கிடைத்துள்ளது.