தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு, சைக்கிள் ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி, 40 மணி நேரத்தில் 600 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
நேற்று மாலை 4:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய இவர் விழுப்புரம் வழியாக இன்று பெரம்பலூர் வந்தடைந்தார். தொடர்ந்து, பெரம்பலூரில் இருந்து ஆத்தூர், சேலம் வழியாக, மீண்டும் நாளை காலை 8:30 மணி அளவில் சென்னை சென்று அடைவார். இவருடன் மேலும் 42 பேர் இந்தப் பயணம் மேற்கொண்டனர்.
இது குறித்து, பயணத்தின் தலைவர் சுந்தர், ”எவ்வளவு மணி நேரத்தில் நாம் சைக்கிள் ஓட்டுகிறோம். உடல் நலத்தைப் பேணிக் காக்க சைக்கிள் ஓட்டுவதன் அவசியம்” என்பதை வலியுறுத்தி, இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
சைக்கிள் விழிப்புணர்வு பயணம் குழு கேப்டன் சுந்தர் பின்னர் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ”உடல் நலத்தை பேணி காக்க அவசியம் சைக்கிள் ஓட்ட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி