பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அரசு போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் விதி திருத்தம் 288 ஏ-வை கைவிட வேண்டும். மேலும், இராணுவ ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்கிற இந்திய அரசுக்கு சொந்தமான 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை தனியாரிடம் விற்கக் கூடாது, ரயில்வே உற்பத்தி பிரிவுகளையும், தனியாரிடம் ஒப்படைத்த 109 ரயில்வே போக்குவரத்து தடங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.