தொடர்வண்டியான அரசு தொடக்கப்பள்ளி - Indian railway
பெரம்பலூர்: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பள்ளில் படித்த முன்னாள் மாணவர்கள் செய்துள்ள காரியம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்வண்டி தொடக்கப்பள்ளி
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அரசு தொடக்கபள்ளிக்கு ரயில் போல வர்ணம் தீட்டி உள்ளனர். தற்போது இந்த பள்ளியானது அப்பகுதி பொதுமக்களை கவர்ந்து இழுப்பது மட்டுமில்லாது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.