தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
பெரம்பலூரில் அமமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு! - மக்களவைத் தேர்தல்
பெரம்பலூர்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ammk
அந்தவகையில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன், பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதிகளான துறைமங்கலம், சங்கு பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்கு சேகரிப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் மனோகரன், நடிகர் ஜெயமணி, மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.