ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கொன்றை மலர்கள் சீசன் தொடங்கி பூத்துக் குலுங்குவது வழக்கம். தற்போது தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திலும் அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள் தற்பொழுது பூத்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
பெரம்பலூரில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் கொன்றை பூக்கள்! - flower
பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் கொன்றைப் பூக்கள் கண்ணை கவரும் வகையில் உள்ளன.
பெரம்பலூரில் பூத்து குலுங்கும் மஞ்சள் கொன்றை பூக்கள்
மரங்களுக்கு இடையில், மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்கும் இந்த கொன்றை மலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வருகை தரும் பொதுமக்களும் பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர். இதே போல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இந்த மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்கி ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.