பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி - perambalur
பெரம்பலூர்: மாவட்ட அளவிலான டேக் வாண்டோ போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

டேக் வாண்டோ
டேக் வாண்டோ
இந்த போட்டிகள் சீனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் கேடட் என, நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், ஆகஸ்டு மாதம் தருமபுரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். இந்தப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் நடைபெற இருக்கிறது.