பெரம்பலூர் மாவட்டம் இறையூர் அருகே சின்னாறு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பத்து சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் வீட்டில் வந்து பார்க்கும்போது கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இது குறித்து மங்களமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூரில் இருவேறு இடங்களில் கொள்ளை, வழிப்பறி...! - Preambalur
பெரம்பலூர்: இருவேறு இடங்களில் நடந்த கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
![பெரம்பலூரில் இருவேறு இடங்களில் கொள்ளை, வழிப்பறி...!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3202040-thumbnail-3x2-preambalur.jpg)
இதேபோல், செட்டிகுளம் ஆலத்துார் சாலையில் வரதராஜன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்தரூ.1.50 லட்சம் மதிப்புள்ள எட்டு சவரன் சங்கிலி, மோதிரம், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்துள்ள வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 18 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.