தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் விதை சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்ட ககன்தீப் சிங் பேடி

பெரம்பலூர்: சொக்கநாதபுரத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

By

Published : Jun 9, 2020, 8:33 PM IST

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி சொக்கநாதபுரத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வாயிலாக 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பெரம்பலூர் மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டு 170 விவசாயிகளை ஒருங்கிணைத்து, உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்நிறுவனம் தற்போது 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,008 உறுப்பினர்களுடன் செயல்பட்டுவருகிறது.

மேலும், வெப் சா உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் அரசுத் திட்டங்களின் வாயிலாக நிதியுதவி பெற்று 60 லட்சம் ரூபாய் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலையமும் சேமிப்பு கிடங்கும், 15.40 லட்சம் ரூபாயில் பருப்பு ஆலையும் அமைக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் மற்றும் வயல்வெளி பயிற்சி, விவசாய இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் விநியோகம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க:மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மனு அளித்த விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details