தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நேர்காணல் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் கலந்துகொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சிப் பணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கருத்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிசில்லா பாண்டியன், தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றோம். எதிர்காலத்தில் தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டி கூட்டணி முடிவு எடுக்கப்படும் என்றார்.