பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைகுடிகாட்டில் கடந்த 24-8-2019 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முத்தலாக் சட்டம் மற்றும் காஷ்மீர் சுயாட்சி கறுப்பு சட்டங்கள் என்ற தலைப்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமுமுக-வின் திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமாண முகமது ஷரீப் பேசினார்.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: தமுமுக நிர்வாகி நீக்கம் - அதிமுக
பெரம்பலூர்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை பேச்சாளர் ஷரீப் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
![பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: தமுமுக நிர்வாகி நீக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4270135-thumbnail-3x2-pbl.jpg)
அப்போது, நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை மிரட்டல் விடுத்து பேசியதாகவும், பாராளுமன்றத்தை தகர்ப்போம் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து மங்களமேடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட முகமது ஷரீப், பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’லெப்பைக்குடிக்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முகமது ஷரீப் தமுமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக பேசியுள்ளார் என்றும், ஜனநாயக நெறிமுறைகள் வழியாக செயல்படும் தமுமுக அறநெறிக்கு முரணாக அமைந்துள்ள அவரது கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும், தலைமை கழக பேச்சாளர் பொறுப்பில் இருந்து முகமது ஷரீப்பை நீக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.