பெரம்பலூர்: வி.களத்தூர் அருகேயுள்ள கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் குளிப்பதும், துணி துவப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று(ஜன.17) இனாம் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி, ரேணுகா, சௌந்தர்யா, ராதிகா ஆகிய நான்கு பேர் குளிக்க சென்றுள்ளனர்.
எதிர்பாராத விதமாக நான்கு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை அருகிலிருந்தவர்கள் பார்த்து, நான்கு பேரையும் மயக்க நிலையில் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில், பத்தமாவதி, ரேணுகா, சௌந்தர்யா ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.